நாடுமுழுவதும் அச்சுறுத்தும் டெங்கு... தமிழககத்தில் 4,174 பேர்பாதிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழக, கேரளா எல்லையோர மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது ஜூலை 2 வரை தமிழகத்தில் 4,174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 18,700க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சகம் ஜூலை 4 ஆம் தேதி வெளிட்ட தகவலில் இதில் ஜூலை 2 ஆம் தேதி வரை கேரளாவில் அதிகபட்சமாக 9,104 பேரும், அடுத்ததாக தமிழ்நாட்டில் 4,174 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கேரளாவில் பாதிப்பு அதிகம்
கேரளாவில் டெங்கு காய்ச்சலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கிறது புள்ளி விபரம்.
சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவிப்புபடி இந்த ஆண்டு ஜூலை 2 ம் தேதி வரை கேரளாவில் 9,104 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் டெங்கு
அடுத்ததாக தமிழ்நாட்டில் 4,174 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் அதிகபட்சமாக 1945 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் பாதிப்பு
குஜராத்தில் 616 பேரும், அடுத்ததாக ஆந்திரப் பிரதேசத்தில் 606 பேரும்,மேற்கு வங்கத்தில் 469 பேரும், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

சிக்குன்குனியா
டெல்லியில் 100க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஜூலை 2ஆம் தேதி வரை 10,952 பேர் சிக்குன்குனியாவால் பாதிப்படைந்துள்ளதாகவும், இதில் கர்நாடகாவில் அதிகபட்சமாக 4047 பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வெக்டார்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணிகள் குறித்து ஜூலை4 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தேசிய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் சி.கே. மிஸ்ரா, ஐ.சி.எம்.ஆர்.ஆர்.ஏ. பொது இயக்குநர் சவுமியா சுவாமிநாதன், தேசிய வெக்டார் பார்ன் டிசைன் கண்ட்ரோல் புரோகிராம் உள்ளிட்ட மூத்த நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொற்றுநோய் தடுப்பு
இதில் பங்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், ஜே.பி.நட்டா, இரண்டு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இந்தத் தொற்று நோய் தடுப்பது குறித்து ஏற்கனவே மூன்று வீடியோ கான்பரசிங் நடத்தப்பட்டு 13 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

கேரளாவிற்கு சுகாதார குழு
கேரளாவில் பருவமழை துவங்குவதால் அங்கு டெங்கு, மலேரியா மற்றும் பிற தொற்று நோய்களின் தாக்குதலை மக்கள் சந்தித்து வருகின்றனர். நாங்கள் ஏற்கனவே கேரளாவிற்கு ஒரு சுகாதார குழுவை அனுப்பினோம். இந்தக் குழு கேரளாவில் நிலவும் நிலைமையை மதிப்பிட்ட பிறகு திரும்பி வந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக கேரளாவிலிருந்து எந்த வேண்டுகோளும் வரவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் சி.கே. மிஸ்ரா கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications