பள்ளி பேருந்து விபத்து... 2 குழந்தைகளைப் பறி கொடுத்த தந்தை மாரடைப்பால் மரணம்
ஹைதராபாத்: பள்ளி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் தனது இரண்டு குழந்தைகள் பலியான சோகத்தை தாங்க முடியாமல் அக்குழந்தைகளின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்தார். ஒரே நாளில் அக்குடும்பத்தில் மூவர் உயிரிழந்ததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவர்கள் பயணம் செய்த பள்ளி பேருந்து ஒன்று நேற்று காலை ஆளில்லாத ரயில்வே கேட்டைக் கடக்க முற்பட்ட போது விபத்தில் சிக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே 18 குழந்தைகள் பலியாயினர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 21 குழந்தைகளில், 7 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் சோகம் என்னவென்றால், இந்த விபத்தில் பலியானவர்களில் சிலர் அண்ணன், அக்கா, தம்பி மற்றும் தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான்.
அந்தவகையில், கிருஷ்ணாபாத் பகுதியைச் சேர்ந்த அக்காள், தம்பி ரஜியா, ஹமீத் ஆகியோரும் இந்த விபத்தில் பலியானார்கள். இவர்களின் தந்தை முகமது வகீத் விபத்து நடந்த 10 நிமிடத்துக்கு முன்புதான் குழந்தைகளை பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், சிறிது நேரத்திலேயே பள்ளி பேருந்து ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதாக வகீத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. அதிர்ச்சியடைந்த வகீத் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு தனது குழந்தைகளை சடலமாகக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு வகீத் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி வகீத் பரிதாபமாக உயிரிழந்தார்.
சில மணி நேரங்களிலேயே கணவன் மற்றும் தன் இரண்டு குழந்தைகளை இழந்து அனாதையான வகீத்தின் மனைவி கதறி அழுதது பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications