பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மியின் 18 நிபந்தனைகள்
டெல்லி: பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆதரவைப் பெறுவதற்கு 18 நிபந்தனைகளை விதித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை அக்கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோருக்கு கெஜ்ரிவால் அனுப்பியுள்ள 18 நிபந்தனை கடிதம்:

- டெல்லியில் விஐபி கலாச்சாரம் என்பது நிறுத்தப்பட வேண்டும். எந்த ஒரு எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் அதிகாரியும் சிவப்பு சுழல் விளக்கு காரில் பயணிக்க கூடாது. அதேபோல் ஆடம்பர பங்களாக்களில் வசிப்பதும் சிறப்பு பாதுகாப்பு கோருவதும் கூடாது.
- அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன்லோக்பால் மசோதாவை அப்படியே நிறைவேற்ற வேண்டும்.
- ஒவ்வொரு காலனி உட்பட அனைத்து நிலைகளிலும் மொஹல்லா சபாக்கள் உருவாக்கப்பட்டு அவையே தீர்மானிக்க வேண்டும்.
- டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
- டெல்லியில் செயல்படும் அனைத்து மின்சார நிறுவனங்களும் தணிக்கைக்குட்படுத்தப்பட வேண்டும். அப்படி உட்படுத்திக் கொள்ள தயாராக இல்லாத நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து.
- மின்சார மீட்டர்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.
- ஒருநாளைக்கு 220 லிட்டர் நீர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்னவானது?
- ஒழுங்குபடுத்தாத காலனிகள் முறைப்படுத்துதல் அவசியம்.
- குடிசைவாழ் மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகள் வழங்கப்பட வேண்டும்.
- தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு சாதாரண வர்த்தகருக்கும் சாலைகள், மின்சாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்.
- சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை கடுமையாக எதிர்க்கிறோம்.
- கிராமப்புற விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- 500 அரசு பள்ளிகள் திறப்பது, தனியார் பள்ளிகளுக்கான நிதி உதவியை நிறுத்தல் , கட்டண முறையை பகிரங்கப்படுத்தல்
- நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள் திறப்பது
- பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு குழுக்களள் அமைத்தல்
- அனைத்து வழக்குகளையும் 6 மாத காலத்துக்குள் தீர்வு காணும் வகையில் நீதித்துறை மேம்பாடு
- இந்த பிரச்சனைகளில் டெல்லி மாநாகராட்சியின் ஒத்துழைப்பு எப்படியானதாக இருக்கும்?
ஆகிய பிரச்சனைகள் குறித்த நிலைப்பாட்டை கேட்டு அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications