ஒடிஷா- ஆந்திரா எல்லையில் அதிரடி தேடுதல் வேட்டை- 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!!
மல்காங்கிரி: ஒடிஷா- ஆந்திரா எல்லையான மல்காங்கிரி வனப்பகுதியில் பதுங்கியிருந்த 18 மாவோயிஸ்டுகள், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 2 ரைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒடிஷா- ஆந்திரா மாநில எல்லையையொட்டி வனப்பகுதி மல்காங்கிரி மாவட்டம். மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இப்பகுதி இருந்து வருகிறது.

ஒடிஷா, ஆந்திரா போலீசார் இணைந்து இன்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையின் போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது.

இதில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 2 ரைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 2 போலீசார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக ஆந்திர பிரதேச காவல்துறை அதிகாரி ராகுல் தேவ் சர்மா கூறுகையில், மல்காங்கிரி எல்லையில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த என்கவுண்ட்டரில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதிகள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

இதேபோல கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையில் 13 மாவோயிஸ்டுகளின் தளபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications