ஆந்திராவைப் புரட்டிப் போட்ட அடைமழை- மின்னல் தாக்கி 19 பேர் பரிதாப பலி; நிவாரணத் தொகை அறிவிப்பு
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் பல மாவட்டங்களை நேற்று சுழன்றடித்த கன மழையின் விளைவாக மின்னல் தாக்கி 19 பேர் பலியாகியுள்ளனர்.
குறிப்பாக, கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு கோதாவரி, பிரகாசம், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த இடியுடன் கூடிய பெருமழையால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
பிரகாசம் மாவட்டத்தில் மூன்று பெண்கள் உள்பட ஆறு பேரும், நெல்லூர் மாவட்டத்தில் ஐந்து பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு பெண் உள்பட நான்கு பேரும், குண்டூர் மாவட்டத்தில் இருவரும், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருவரும் நேற்று மின்னல் தாக்கி பலியாகினர்.

குண்டூர் மாவட்டத்தில் நேற்று ஒரு விளையாட்டரங்கில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆந்திரா, திரிபுரா மகளிர் குழுவினர் அதிர்ஷ்டவசமாக மின்னலின் தாக்கத்தில் இருந்து தப்பி உயிர் பிழைத்தனர். மழைக்காக அவர்கள் விளையாட்டரங்கத்தில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் ஒதுங்கி நின்றிருந்த வேளையில் விளையாட்டரங்கத்தின் உள்ளே பாய்ந்த மின்னல்பட்டு அங்கிருந்த ஒரு பெரிய மரம் முழுவதுமாக எரிந்து கருகியது.
மின்னல் தாக்கி உயிரிழந்த 19 பேரின் குடும்பத்தாருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications