Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்ட பகலில் 19 வயது இளம்பெண் கடத்தல்.. சினிமா பாணியில் பரபர சம்பவம்.. சிசிடிவி காட்சியால் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தின் குவாலியரில் இளம்பெண் ஒருவரை பட்ட பகலில் அடையாளம் தெரியாத இருவர் சினிமா பாணியில் பைக்கில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டன. அங்கு தேர்தலில் 76 சதவிகித வாக்குகள் பதிவாகின. வரும் 3 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

19-year-old woman kidnapped by two masked men from a petrol pump in broad daylight in Madhya Pradesh

தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், அங்கு தேர்தல் பரபரப்பு அடங்கியுள்ளது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சினிமாவை மிஞ்சும் வகையில் இளம்பெண் பட்ட பகலில் கடத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் பெட்ரோல் பங்க் ஒன்றில் நின்று கொண்டு இருந்த 19 - வயது இளம்பெண்ணை பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், பெண்ணை பைக்கில் தூக்கிவைத்து கடத்தி செல்கின்றனர். இதனை நேரில் பார்த்துக்கொண்டு இருந்தும் அங்கு இருக்கும் மக்கள் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். தடுப்பதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.

பைக்கை ஓட்டி வந்த நபர் ஹெல்மெட் அணிந்தபடியும் மற்றொரு நபர் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டும் நிற்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கும் சென்றது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கடத்தி செல்லப்பட்ட இளம்பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட இளம்பெண் மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அங்குள்ள ஒரு கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார் என்றும் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது சகோதரருக்காக காத்திருந்த போது தான் இளம்பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்று இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+