For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1993 மும்பை குண்டுவெடிப்பு: 2 பேருக்கு தூக்குத் தண்டனை.. அபு சலீமுக்கு ஆயுள்!

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட இருவருக்கு தூக்கு தண்டனை வழங்கியது தடா நீதிமன்றம்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட இருவருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை மும்பையில் உள்ள பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைக்கான சிறப்பு நீதிமன்றம் (தடா) விசாரித்து வருகிறது.

1993 Mumbai blasts: Abu Salem gets life, 2 were got death sentence

இந்த வழக்கில் பெரோஸ் அப்துல் ரஷீத் கான், தாஹிர், அபு சலீம், கரிமுல்லா கான், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முஸ்தபா சிறையிலேயே இயற்கையாக மரணம் அடைந்துவிட்டார்.

மற்ற 4 பேருக்கான தண்டனை விவரங்கள் இன்று தடா நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் பெரோஸ் அப்துல் ரஷீத் கான் மற்றும் தாஹிர் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், அபு சலீம் மற்றும் கரிமுல்லா கான் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையும், ரியாஸ் சித்திக்கிற்கு 10 ஆண்டுகள் சிறையும் விதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கப்பட்டது.

English summary
A special TADA court in Mumbai today today sentenced Firoz Abdul Rashid Khan and Tahir Merchant to death in the 1993 Mumbai serial blasts case. Abu Salem and Karimullah Khan were given life in prison while Riaz Siddiqui was sentenced to ten years in jail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X