2 வயது குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை.. குற்றவாளிகள் சிக்கினர்
போபால்: மத்திய பிரதேசத்தில் 2 வயது குழந்தை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தின் தலைநகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் கடந்த செப்டம்பர் 17ம் தேதி போலீசில் புகார் ஒன்று அளித்தார்.

அந்த புகாரில் நேற்று இரவில் இருந்து எனது 2வது குழந்தையை காணவில்லை என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், செப்டம்பர் 18 அன்று விவசாய நிலத்தின் ஒரு சுவர் ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் சிறுமியை கடத்தி சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை கண்டுபிடித்தனர்.
இந்த வழக்கை விசாரிக்க தனிப்படை அமைத்த போலீசார், குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.20000 பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தனர். இது நல்ல பலனை கொடுத்தது. குற்றவாளிகள் போலீசிடம் நேற்று சிக்சினர்.
சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சோனு தாக்கூர் என்ற சோனு கோண்ட் (21), சுபம் மல்லா (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது
ஐபிசி பிரிவு 376 (பலாத்காரம்), 363 (கடத்தல்), 302 (கொலை), 201 (சான்றுகள் காணாமல் போதல்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி எஸ்.பாகுனா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications