மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் தீ விபத்து - பெண் உட்பட 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் அரசு மருத்துவமனையில் இன்று திடீரென தீ பிடித்தது. இந்த தீயில் சிக்கி ஒரு பெண் பலியானார்.

மேலும் பலர் மருத்துவமனைக்குள் சிக்கி இருப்பதால் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்ததும் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் உட்பட பலரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறினார்.

பலர் ஜன்னல்களை உடைத்து வெளியே குதித்தனர். மருத்துவமனைக்குள் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

மருத்துவமனையின் மருந்துகள் வைக்கப்பட்டு இருக்கும் அறையில்தான் முதலில் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்னரே மற்ற அறைகளுக்கு பரவியது என்று கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து விசாரணைக்கு முதல்வர் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+