முசாபர்நகரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி
முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர். சம்பவ இடத்தில் கலவரத் தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முசாபர் நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு அது பெரும் மத கலவரமாக மாறியது.

62 பேர் உயிரிழப்பு
செப்டம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில், இரு பிரிவினர் இடையே வகுப்பு கலவரம் ஏற்பட்டது. மிகப் பெரிய அளவில் நிகழ்ந்த, இந்தக் கலவரத்தில், 62 பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில், இந்த கலவரம் நடந்தது.

முகாம்களில் 40000 பேர்
முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் சூறையாடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டது. அவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

திரும்பிய அமைதி
ராணுவத்தின் தீவிர ரோந்து காரணமாக தற்போது அந்த மாவட்டத்தில் அமைதி திரும்பியது. நீடித்த ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் அங்கு இயல்புநிலை திரும்பியது.

மீண்டும் கலவரம்
இந்த நிலையில் அவ்வப்போது முசாபர்நகரில் கலவரங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த செவ்வாய்கிழமையன்று முசாஃபர்நகரில் பாஜக மூத்த தலைவர் ஓம்வீர் (40) அடையாளம் தெரியாத நபர்களால் இந்த சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் 20 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் முசாபர்நகரின் புகானா என்ற பகுதியில் இரு பிரிவினரிடையே முன் விரோதம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டிருந்த மோதல் இன்று கலவரமாக மாறியது.

இருவர் பலி
கலவரத்தின்போது கிராமத்தினர் சிலர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் இருவர் பலியானதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் குவிப்பு
சம்பவ இடத்தில், பதற்றம் நிலவுவதை அடுத்து புகானா மாவட்டம் முழுவதிலும், கலவரத் தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications