ஜம்மு-காஷ்மீரில் அரசு அலுவலகத்தில் பதுங்கிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாம்போரில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடந்த 2 நாட்களாக நீடித்து வந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாம்போர் பகுதியில் ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள விடுதிக்குள் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை அதிகாலை புகுந்தனர். பின்னர், அங்கிருந்த படுக்கைகளை தீயிட்டு கொளுத்தினர். இதனையடுத்து, பாதுகாப்பு படை வீரர்கள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். இதனைக் கண்ட தீவிரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அப்போது பாதுகாப்புப் படை வீரர் காயம் அடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2 நாட்களாக கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அரசு கட்டடத்திற்குள் மறைந்திருக்கும் தீவிரவாதிகள் எத்தனைப் பேர் என்பது தெரியாத நிலையில் பாதுகாப்பு படை வீரர்கள் கடும் தாக்குதலை தீவிரவாதிகள் மீது நடத்தி வருகின்றனர்.
இந்தத் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகரில் பெரும்பாலான பகுதிகளில் காவல் துறை ஊரடங்கு உத்தரவை நேற்று அமல்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications