காஷ்மீரில் உச்சக்கட்ட பதற்றம்.. 2 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கொலை! பாதுகாப்பு படையினர் அதிரடி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் 2 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பாதுகாப்பு படையினர் பயங்கரவாத தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சோபியான் பகுதியை அடுத்து உள்ள அல்ஷிபோரா என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர்கள் அப்பகுதிக்கு படையினரும் விரைந்தனர். அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கொல்லப்பட்டவர்கள் மொரிபாத் மக்பூல் மற்றும் ஜசீம் பரூக் எனப்படும் அக்பர் என்றும், இவர்கள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதில் கொல்லப்பட்ட அக்பர் என்ற பயங்கரவாதி சஞ்சய் சர்மா என்பவரின் கொலை வழக்கில் தொடர்புடையவர்.
இதுகுறித்து காஷ்மீர் கூடுதல் டிஜிபி தெரிவிக்கையில், "பாதுகாப்பு படையினர் உடனான சண்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மொரிபாத் மக்பூல் மற்றும் ஜசீம் பரூக் என்ற அக்பர் ஆகிய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மா கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் அக்பர்" என்று கூறி இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications