திடீரென நின்ற இதயம்.. 20 நாளே ஆன குழந்தையின் உயிரை பறித்த ‘டிஜே மியூசிக்’.. சிலை கரைப்பில் சோகம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: லட்சுமி சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது இசைக்கப்பட்ட அதிகப்படியான டிஜே மியூசிக்கால் பிறந்து 20 நாட்களே ஆன பெண் குழந்தையின் இதயம் திடீரென்று நின்றுபோனதாகவும், இதனால் அந்த குழந்தை இறந்ததாகவும் சொல்லப்படும் சம்பவம் பொதுமக்களிடைே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் மணியார் போலீஸ் எல்லைக்குட்பட்ட முடியாரி கிராமத்தை சேர்ந்தவர் ரிமா தேவி. திருமணம் ஆனவர். இவர் குடிசையில் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் நேற்று முன்தினம் லட்சுமி சிலை கரைப்பு ஊர்வலம் நடந்தது.

DJ Music

அப்போது ஏராளமானவர்கள் ஆடிப்பாடி ஊர்வலமாக சென்றனர். டிஜே மியூசிக் இசைக்கப்பட்டது. ஊர்வலம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு அதில் பங்கேற்றவர்கள் ஆடிப்பாடினர். ரிமா தேவியின் குடிசை அருகேயும் ஊர்வலம் நிறுத்தப்பட்டது.

அங்கு அதிகப்படியான சத்தத்தில் டிஜே மியூசிக் இசைக்கப்பட்டது. அப்போது ரிமா தேவியின் குழந்தை குடிசையில் தூங்கி கொண்டிருந்தது. இதனால் ரிமா தேவி குடும்பத்தினர், ஊர்வலக்காரர்களிடம் பேசினர். ''குழந்தை தூங்குகிறது. இதனால் டிஜே மியூசிக் சத்தத்தை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் கொஞ்சம் தூரம் சென்று ஊர்வலத்தை நிறுத்தி டிஜே மியூசிக்கை இசைக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தனர்.

ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அதிகப்படியான டிஜே மியூசிக்கால் தூங்கி கொண்டிருந்த குழந்தை கண்விழித்தது. அழ தொடங்கியது. குழந்தை விடாமல் அழுதது. குழந்தையின் அழுகையை நிறுத்த ரிமா தேவி முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. அப்போது திடீரென்று குழந்தையின் அழுகுரல் நின்றதோடு, குழந்தையிடம் அசைவு எதுவும் இல்லை.

இதனால் பயந்துபோன குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். அதிகப்படியான டிஜே இசையால் ஏற்பட்ட அதிர்வால் திடீரென்று இதயத்துடிப்பு நின்றுப்போனதால் குழந்தை இறந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இதுதொடர்பாக மணியார் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் முதற்கட்டமாக டிஜே உபகரணங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் இறப்புக்கான காரணம் தெரியவரும். அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்க்கிள் அதிகாரி ஜெய்சங்கர் மிஸ்ரா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+