இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்த 20 இலங்கை மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
காக்கிநாடா: இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 20 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் நிஷாம்பட்டினம் கடலோர பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது இந்திய கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து இலங்கை மீனவர்கள் 4 படகுகளில் மீன்பிடித்தது தெரியவந்தது.
உடனடியாக கடலோர காவல்படையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். அந்த படகுகளில் 20 மீனவர்கள் இருந்தனர். அவர்களை கைது செய்த கடற்படையினர் 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைதான மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக காக்கிநாடாவில் உள்ள கடலோர காவல்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைதான மீனவர்கள் 20 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications