ஆந்திரா போலீஸின் காட்டுமிராண்டித்தனம்: திருப்பதி அருகே 20 தமிழர்கள் சுட்டுப் படுகொலை!!
திருப்பதி: செம்மரம் வெட்டியதாக கூறி தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திரா போலீசார் காட்டுமிராண்டித்தனமாக சுட்டுப் படுகொலை செய்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 12 பேர் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது 20 பேருமே தமிழர்கள்தான் என்று ஆந்திர மாநில வனத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆந்திராவில் செம்மரம் வெட்டுகிறார்கள் என்று கூறி நூற்றுக்கணக்கானோரை ஆந்திரா போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் உள்ள ஸ்ரீநிவாசமங்காபுரத்தில் தமிழக தொழிலாளர்கள் 200 பேர் செம்மரம் வெட்டுவதாக கூறி டிஐஜி காந்தராவ் தலைமையிலான செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் இன்று காலை தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது தமிழக தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்தில் பலியானோர் தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
கொல்லப்பட்டவர்களை மிகக் கொடூரமான முறையில் மிக நெருக்கத்தில் வைத்து தானியங்கித் துப்பாக்கிகளால் வெறித்தனமாக ஆந்திர போலீஸார் சுட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலருக்கு நெற்றியில் குண்டு பாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications