முட்டை வாங்க போன 13 வயது சிறுமி.. கடத்தி சீரழித்த 16 வயது சிறுவன்.. இப்போ 20 வருஷ ஜெயில்!
13 வயது சிறுமியை சீரழித்த 17 வயது சிறுவனுக்கு 20 வருட ஜெயில் கிடைத்துள்ளது
ராஞ்சி: 13 வயசு சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததில், 17 வயசு சிறுவனுக்கு 20 வருஷ ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகா பகுதியை சேர்ந்த 13 வயசு சிறுமி, கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி முட்டை வாங்க கடைக்கு போனார்.

அப்போது, பைக்கில் 16 வயசு சிறுவன் ஒருவன், அந்த சிறுமியை பக்கத்தில் இருந்த அணைப்பகுதிக்கு கடத்தி சென்று விட்டான். அது மட்டுமில்லை, அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரமும் செய்தான்.
இந்த சம்பவம் அந்த மாநிலம் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சம்பந்தமான வழக்கு சிம்தேகாவில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி நீரஜ்குமார் முன்னிலையில் இதுநாள் வரை நடந்து வந்தது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு 20 வருஷ தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. இப்போது, இந்த சம்பவத்தில் அடுத்த முக்கிய குற்றவாளி அந்த 16 வயது சிறுவன்தான் என்பது நிரூபணமாகி உள்ளது. இதையடுத்து நீதிபதி சிறுவனுக்கு 20 வருட கடுங்காவல் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
ஆனால் குற்றவாளி சிறுவன் என்பதால், அவனை உடனடியாக ஜெயிலுக்கு அனுப்ப முடியாது என்பதால், 21 வயது ஆகும் வரை சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் காவலில் வைக்கப்பட உள்ளான். அங்கேயே அவனுக்கு படிப்பு மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications