2014 தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா பிரச்சினை இல்லை.. ராகுல் காந்தி அதிரடிப் பேச்சு
ராஜ்கோட்: 2014 லோக்சபா தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா சாவா பிரச்சினை அல்ல. தேர்தலுக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சி நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
அவரது இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி மீது நம்பிக்கை இல்லாதது போல ராகுலின் பேச்சு அமைந்திருப்பதாக சலசலப்பும்
ஏற்பட்டுள்ளது.
ராஜ்கோட்டில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது குறித்து ஜாம்நகர் காங்கிரஸ் எம்.பி. விக்ரம் மடம் கூறுகையில், நமது பலவீனங்களிலிரு்நது நாம் வெளி வர வேண்டும். நமது பலத்தை வெளிக்காட்ட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறினாராம்.

குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் ராகுல் காந்தி. வடக்கு குஜராத் மற்றும் செளராஷ்டிர பகுதி காங்கிரஸ் பணியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில்தான் இப்படிக் கூறியுள்ளார். இந்தக் கூட்டத்திற்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ராகுல் மேலும் பேசியதாக விக்ரம் மடம் கூறுகையில்,2014 பொதுத் தேர்தல் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அது வாழ்வா, சாவா நிலையில் இல்லை. தேர்தலுக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சி நிலைத்திருக்கும். காங்கிரஸ் கட்சிதான் நாட்டின் முதன்மையான அரசியல் கட்சி என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.
நேற்று அகமதாபாத்தில் ராகுல் பேசுகையில், 2014 தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் வெல்லும் என்று உறுதிபடக் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தக் கூட்டத்தில் இது வாழ்வா சாவா பிரச்சினை இல்லை என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மோடி அலையால் கலங்கிப் போயிருந்த குஜராத் காங்கிரஸாருக்கு ராகுல் காந்தியின் வருகை உற்சாகத்தைக் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications