21 உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாற்றம்! சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் ராஜஸ்தானுக்கு மாற்றம்
டெல்லி: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராமை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இதே போல நாடு முழுவதும் 21 உயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. அதேபோல், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடந்த 13ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் மூத்த நீதிபதிகளில் ஒருவரான அபய் ஓகாவும் ஓய்வு பெற்றார். இதை அடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 இல் இருந்து 31 ஆக குறைந்தது.
தொடர்ந்து உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் பதவியேற்ற நிலையில் திங்கட்கிழமை உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூடியது. தொடர்ந்து மூன்று மாநில உயர் நீதிமன்றங்களில் இருந்து மூன்று நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

அதன்படி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஞ்சார்யா, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய்பிஷ்னு, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துருகர் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் உள்ளிட்ட 21 உயர்நீதிமன்ற நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பின் படி," தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி சுஜோய் பாl, கொல்கட்டா உயர்நீதிமன்றத்திற்கும், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி வி. காமேஸ்வர் ராவை டெல்லி உயர்நீதிமன்றத்திற்கும், நீதிபதி லனுசுங்கும் ஜமீரை குவஹாத்தி உயர் நீதிமன்றத்திலிருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குவஹாத்தி உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதி மனாஷ் ரஞ்சன் பதக்கை ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்ப்ரேவை மும்பை உயர் நீதிமன்றத்திலிருந்து டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Supreme Court Collegium recommends transfer/repatriation of 21 High Court judges. pic.twitter.com/snQPu0bGI1
— ANI (@ANI) May 27, 2025
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி அஸ்வினி குமார் மிஸ்ரா பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கும், கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி சுமன் ஷியாம் மும்பை உயர்நீதிமன்றத்திற்கும், பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து விவேக் சவுத்ரி டில்லி உயர் நீதிமன்றத்திற்கும், கேரளா உயர் நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி தினேஷ் குமார் கர்நாடகா உயர்நீதிமன்றத்திற்கும், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து விவேக் குமார் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பட்டு தேவானந்த் ஆந்திரா உயர்நீதிமன்றத்திற்கும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து ஓம் பிரகாஷ் சுக்லா டெல்லி உயர் நீதிமன்றத்திற்கும், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இருந்து சந்திரசேகர் மும்பை உயர் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோல பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் இருந்து சுதிர் சிங் பாட்னா உயர்நீதிமன்றத்திற்கும், அரியானா உயர் நீதிமன்றத்தில் இருந்து அணில் சேதர்பால் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் இருந்து அருண்குமார் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கும், அலகாபாத் உயர்நீதி மன்றத்திலிருந்து ஜெயந்த் பானர்ஜி கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து சுமலதா தெலுங்கானா உயர்நீதிமன்றத்திற்கும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இருந்து லலிதா தெலுங்கானா உயர் நீதிமன்றத்திற்கும், பாட்னா உயர் நீதிமன்றத்தில் இருந்து அன்னி ரெட்டி தெலுங்கானா உயர்நீதிமன்றத்திற்கும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications