ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ்.. 21 பேர் உயிரிழப்பு.. சோகத்தில் முடிந்த ஆன்மீக பயணம்
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஆன்மீக சுற்றுலா வந்த பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். உத்தர பிரதேசத்தில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற இடத்தில் இந்த சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இருந்து பஸ் ஒன்றில் ஆன்மீக பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு 60க்கும் மேற்பட்டோர் சென்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரெசாய் மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயத்திற்கு அவர்கள் சென்று கொண்டிருந்தனர். பஸ் ஜம்மு மாவட்டத்தின் சோகி ஷோரா பெல்டில் உள்ள டாங்கிலி மோர் அருகே வந்த போது திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்தது.

இதில் தறிகெட்டு ஓடிய பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்தவர்கள் படுகாயமடைந்து அலறி துடித்தனர். பஸ் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் போலீசார், மீட்பு படையின் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 21 பேர் பலியாகினர் என்றும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்மீக சுற்றுலா வந்த இடத்தில் விபத்தில் சிக்கி 21 பேர் பலியாகியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜம்மு அருகே பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் பலர் பலியாகியிருப்பது கூற முடியாத வேதனையை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்றும், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். இதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூன கார்கேவும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications