இந்தியாவில் கால் பதித்த ஸ்டெல்த் ஓமிக்ரான்.. மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து பாதிப்பு -பரபர பின்னணி
போபால்: இந்தியாவில் ஸ்டெல்த் ஓமிக்ரான் எனப்படும் புதிய வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இது கொரோனா வைரஸின் உட்பிரிவு ஆகும். மத்திய பிரதேசத்தில் ஸ்டெல்த் ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக பரவ தொடங்கி உள்ளது.
ஓமிக்ரான் கொரோனாவின் உட்பிரிவான ஸ்டெல்த் வகை ஓமிக்ரான் கேஸ்கள் உலகம் முழுக்க 40+ நாடுகளில் பதிவாகி உள்ளது. இந்தியாவிலும் பதிவாக தொடங்கி உள்ளது. மத்திய பிரதேசத்தில் இதுவரை 22 கேஸ்கள் பதிவாகி உள்ளன.
அங்கு கடந்த 18 நாட்களில் 22 ஸ்டெல்த் வகை ஓமிக்ரான் பதிவாகி உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா ஓமிக்ரான்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அங்கு ஸ்டெல்த் ஓமிக்ரான் மூலம் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்டி பிசிஆர் சோதனையில் இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் கொரோனா இருப்பதை உறுதி செய்யலாம். ஆனால் அது ஸ்டெல்த் வகை ஓமிக்ரானா என்று கண்டுபிடிக்க முடியாது. இதற்கு ஜீன் சோதனைதான் செய்ய வேண்டும்.

ஸ்டெல்த் ஓமிக்ரான்
மத்திய பிரதேசத்தில் ஸ்டெல்த் ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட 22 பேரில் 18 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் மட்டும் தீவிரமான பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த ஸ்டெல்த் ஓமிக்ரான் என்பது ஓமிக்ரானின் உட்பிரிவு ஆகும். ஐரோப்பாவில் அதிக அளவில் இது பரவி வருகிறது. ஓமிக்ரானில் மொத்தமாக மூன்று உட்பிரிவு உள்ளது. அவை BA.1, BA.2, மற்றும் BA.3. இதில் இந்தியாவில் BA.1 பரவி வருகிறது.

ஓமிக்ரான் BA.2
ஓமிக்ரான் BA.2 என்பதுதான் ஸ்டெல்த் ஓமிக்ரான் ஆகும். இதை ஆராய்ச்சிக்கு உட்பட்ட ஓமிக்ரான் வகை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் BA.1 மற்றும் BA.2 இரண்டுக்கும் ஒரே மாதிரியான 32 ஸ்டிரெயின் உள்ளது. அதே சமயம் BA.2 28 புதிய உருமாற்றங்களை பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. BA.1 வகை ஓமிக்ரானில் எஸ் ஜீன் இருக்காது. இதனால் ஆர்டி பிசிஆர் சோதனையில் எஸ் ஜீன் இல்லை என்றால் அதை ஓமிக்ரான் என்று கூறிவிடலாம்.
Recommended Video

ஆர்டி பிசிஆர்
ஆனால் BA.2 வகை ஓமிக்ரானில் எஸ் ஜீன் இருக்கும். இதனால் ஆர்டி பிசிஆர் சோதனையில் ஓமிக்ரான் தான் தாக்கி உள்ளதா என்று கண்டுபிடிக்க முடியாது. இதற்காக ஜீன் சோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் ஸ்டெல்த் வகை ஓமிக்ரானை கண்டறிய முடியும். இப்படி மறைந்து சீக்ரெட்டாக பரவுவதால் BA.2 வகை ஓமிக்ரானை ஸ்டெல்த் வகை ஓமிக்ரான் என்று அறிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications