Exclusive: கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கர்நாடகாவுக்கு 221 மெகாவாட் மின்சார சப்ளை ஆரம்பம்!
2014ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, கூடங்குளம் அமுமின் நிலையத்திலிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50 என்ற குறைந்த கட்டணத்தில் கர்நாடகா 442 மெகாவாட் மின்சாரத்தை பெற முடியும்.
பெங்களூர்: கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 221 மெகாவாட் மின்சாரம் கர்நாடகாவுக்கு வரத் தொடங்கியுள்ளது என்று இம்மாநில மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தார்.
இதுபற்றி இன்று அவர் கூறுகையில், மத்திய உற்பத்தி ஸ்டேஷனுடன் கர்நாடகா மேற்கொண்டுள்ள ஒப்பந்தப்படி, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2வது யூனிட்டில் மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை எட்டும்போது, கர்நாடகாவுக்கு 221 மெகாவாட் மின்சாரம் தரப்பட வேண்டும். கடந்த சனிக்கிழமை கூடங்குளம் 2வது யூனிட் 1000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியுள்ளது. எனவே கர்நாடகாவுக்கு உரிய மின்சார சப்ளை ஆரம்பமாகிவிட்டது.

இதன் மூலம், கர்நாடகாவில் கோடைக்காலத்தில் மின்சார தட்டுப்பாட்டை குறைக்க முடியும் என்றார் அவர்.
2014ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50 என்ற குறைந்த கட்டணத்தில் கர்நாடகா 442 மெகாவாட் மின்சாரத்தை பெற முடியும். ககர்நாடகாவை தவிர தெலுங்கானாவுக்கு கூடங்குளத்தில் இருந்து 50 மெகாவாட், கேரளாவுக்கு 133 மெகாவாட் மின்சாரம் கிடைக்கப்போகிறது. தமிழகத்திற்கு 462.50 மெகாவாட் அளவுக்கு கூடங்குளம் 2வது யூனிட்டிலிருந்து மின்சாரம் ஒதுக்கப்படும்.
கூடங்குளம் அணு கழிவை, கர்நாடக மாநிலம் கோலாரில் கொட்ட உள்ளதாக தகவல் வெளியானபோது அதை கடுமையாக எதிர்த்தது கர்நாடகா. கர்நாடக அரசியல் கட்சியினர் எதிர்ப்பால் மத்திய அரசு அந்த திட்டத்தை கைவிட்டது. இந்நிலையில் கர்நாடகாவுக்கு மின்சாரம் மட்டும், கூடங்குளத்திலிருந்து சப்ளையாவது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications