அமிர்தசரஸில் ரூ.115 கோடி மதிப்புள்ள 23 கிலோ ஹெராயின் பறிமுதல்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் ரூ.115 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் செக்டரில் இருக்கும் தெஹ்காலா எல்லையில் உள்ள முகாம் அருகே போதைப் பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் வியாழக்கிழமை இரவு ரோந்து சென்றனர்.

அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்த எல்லைக்கு யாரோ சிலர் பாக்கெட்டுகளை வீசிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த எல்லைப் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றபோது எல்லையின் அந்த பக்கத்தில் இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு எல்லைப் பாதுகாப்பு படையினரும் சுட்டனர். துப்பாக்கிச்சூடு ஓய்ந்த பிறகு பாக்கெட்டுகள் விழுந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு 23 பாக்கெட்டுகளில் ஹெராயின் போதைப் பொருள் இருந்தது.
ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒரு கிலோ போதைப் பொருள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.115 கோடி ஆகும். மேலும் அந்த பகுதியில் பாகிஸ்தான் சிம் கார்டுடன் கூடிய செல்போன் ஒன்றும் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications