டெல்லி செங்கோட்டை பூங்காவில் அதிர்ச்சி- 23 வயதுப் பெண்ணை சீரழித்த டாக்ஸி டிரைவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகில் உள்ள கோல்டன் ஜூபிளி பூங்காவில் 23 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுன்னு குமார் என்ற டாக்ஸி டிரைவர் அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் லூதியானா செல்வதற்காக ரயில் நிலையம் செல்ல காத்திருந்தபோது அவரை ரயில் நிலையத்தில் விடுவதாக கூறி இந்த டிரைவர் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் செங்கோட்டை பூங்காவுக்குக் காரைத் திருப்பிய அவர் அங்கு வைத்து அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். நேற்று இந்த அக்கிரமம் நடந்துள்ளது.

23 year old woman physically abused in Delhi

30 வயதான சுன்னு குமாரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் லூதியானாவைச் சேர்ந்தவர். இவரது சகோதரர் நொய்டாவில் வசித்து வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக வந்திருந்தார் இவர். பார்த்து முடித்த பின்னர் ஊருக்குச் செல்ல கிளம்பிய சமயத்தில்தான் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்.

ரயில் நிலையத்திற்கு டாக்ஸியில் சென்றபோதுதான் இந்த டிரைவர், ரயில் கேன்சல் ஆகி விட்டதாகவும், பஸ் நிலையத்தில் விடுவதாகவும் கூறி அழைத்துச் சென்று சீரழித்துள்ளார். அதன் பின்னர் இப்பெண்ணை பழைய டெல்லி ரயில் நிலையத்தில் விட்டு விட்டு ஓடி விட்டார் சுன்னு குமார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 23 year old woman was physically abused in Red Fort park in Delhi by a Taxi driver.
Please Wait while comments are loading...