ஒட்டுத்துணி இல்லாமல்.. 23 வயசு மனைவியை.. நிர்வாணமாக்கி.. ஊர்வலமா அழைத்து வந்த கணவன்.. ஷாக்!
இளம்மனைவியை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தி உள்ளார் கணவர்
காந்திநகர்: ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.. இப்படி ஒரு கொடுமை குஜராத்தில் நடந்துள்ளது..!
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தின் தன்பூர் தாலுகாவில் கஜூரி என்ற கிராமம் உள்ளது.. இது ஒரு பழங்குடியினர் வசித்து வரும் கிராமம்.
இங்கு 23 வயதுடைய ஒரு பெண்ணும் வசித்து வருகிறார்.. இவரைதான் நிர்வாணமாக்கி ஊர்வலமாக கூட்டிச் சென்றிருக்கின்றனர்.. அழைத்து சென்றது அவரது கணவரும், குடும்பத்தினரும்தான்.

கள்ளக்காதலன்
காரணம், இந்த பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாம்.. சம்பவத்தன்று, இந்த பெண்ணும், கள்ளக்காதலனும் ஒரு வீட்டிற்குள் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள்.. கையும் களவுமாக சிக்கி விட்டதால், பெண்ணின் குடும்பத்தினர் ஆத்திரமடைந்துள்ளனர்...

கிராமம்
பிறகு, கிராமத்தையே கூட்டி, இந்த பெண்ணை நடுவில் நிற்க வைத்து அவமானப்படுத்தி உள்ளனர்... கணவனே மனைவியை நிர்வாணப்படுத்தி ஊரார் முன்னிலையில் ஊர்வலமாக கூட்டி சென்றுள்ளார். இதை அங்கிருந்தோர் வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.. 23 வயதான அந்த பெண்ணின் உடம்பை அனைவரும் சேர்ந்து நிர்வாணப்படுத்தி உள்ளனர்..

நிர்வாணம்
பெரும்பாலும், கணவனும், கணவனின் குடும்பத்தினருமே அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தியிருக்கின்றனர்.. இதை பார்த்து பதறி போன அருகில் இருக்கும் சில பெண்கள், தங்கள் வீடுகளில் இருந்து மாற்றுத் துணி எடுத்து வந்து தந்திருக்கிறார்கள்.. ஆனால், அதை மாமியார் வீட்டினர் பிடுங்கி வீசியிருக்கிறார்கள்.. குழந்தைகள், பெண்கள் உட்பட எல்லாரும் பார்க்கும்படியாகவே இளம்பெண்ணை ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

கைது
ஒருகட்டத்தில் அந்த பெண்ணை அடிக்க ஆரம்பித்துள்ளனர்.. பழங்குடி இனத்தவரில் கள்ள உறவு வைத்து கொண்டால் இப்படித்தான் தண்டனை தரப்படுமாம்.. இந்த வீடியோ வைரலானதையடுத்து, கடும் கண்டனங்களும் எழுந்தன.. இதையடுத்து போலீசாரின் பார்வைக்கும் சென்றுள்ளது.. இறுதியில், அந்த பெண்ணின் கணவர், இரண்டு மைனர் சிறுவர்கள் உட்பட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. விசாணையும் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications