ரஜினிகாந்த், ரஹ்மானுக்கு கிரேட்டஸ்ட் இந்தியர் விருது- குடியரசுத் தலைவர் கவுரவம்!
டெல்லி: என்டிடிவி நடத்திய கிரேட்டஸ்ட் இந்தியர்கள் 25 பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடமும், சச்சின் டெண்டுல்கருக்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளன. மூனறாவதாக ஏ ஆர் ரஹ்மான் இடம்பெற்றுள்ளார். இவர்கள் அனைவரையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று கவுரவித்தார்.
என்டிடிவி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியானதைக் கொண்டாடும் வகையில் ஒரு ஆன்லைன் கருத்துக் கணிப்பை சில மாதங்களாக அந்நிறுவனம் நடத்தியது.
இதில் இந்தியாவின் அனைத்துத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள், சாதனையாளர்கள் பட்டியலிடப்பட்டிருந்தனர். அதாவது இப்போது வாழும் சாதனையாளர்கள் மட்டும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றனர்.
பொதுமக்கள் இணையதளம் மூலம் வாக்களிக்க வேண்டும். இந்த வாக்கெடுப்பின் முடிவு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்
இதில் சூப்பர் ஸ்டார் 6.43 விகித வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆரம்பத்திலிருந்தே ரஜினிதான் இந்த கணிப்பில் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர்
அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். அவரும் ரஜினி அளவுக்கு வாக்குகள் பெற்றிருந்தாலும், நடுவர்களின் வாக்கு மற்றும் கருத்துக் கணிப்பின் விதிமுறைகள் படி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

ஏஆர் ரஹ்மான்
மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை தந்த ஏஆர் ரஹ்மான்.

ரத்தன் டாடா
தொழிலதிபரும், டாடா குழும முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.

ஷாரூக்கான்
பாலிவுட்டின் கிங் என புகழப்படும் ஷாரூக்கானுக்கு இந்த பட்டியலில் 5வது இடம் கிடைத்துள்ளது.

கபில்தேவ்
25 பேருக்கான பட்டியலில் அமிதாப் பச்சனுக்கு 9வது இடமும், கிரிக்கெட் சாதனையாளர் கபில் தேவுக்கு 15வது இடமும் கிடைத்துள்ளன.

இன்று விருது
இந்த போட்டியில் முதல் 25 சாதனையாளர்களை நேரில் அழைத்து கவுரவிக்கிறது என்டிடிவி. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று சாதனையாளர்களை கவுரவித்தார்

ரஜினி பங்கேற்பு
இந்த விழாவில், பட்டியலில் முதலிடம் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் பங்கேற்று, குடியரசுத் தலைவரிடம் விருதினைப் பெற்றார். அவருடன் லதா ரஜினியும் சென்றிருந்தார்.

என் மாநிலம் தமிழகம்..
ஏஆர் ரஹ்மான் தனக்கான விருதினைப் பெற்றுக் கொண்டு பேசும்போது, இந்த வாய்ப்பைத் தந்த என் மாநிலமான தமிழ்நாட்டுக்கு நன்றி என்றார் பெருமையுடன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications