14 வயது சிறுவனை கரெக்ட் பண்ணி.. அவனை இழுத்து கொண்டு ஓடிப் போய்.. 26 வயசு டீச்சரின் அட்டகாசம்!

8ம் வகுப்பு மாணவனுடன் மாயமாகி உள்ளார் பள்ளி ஆசிரியை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    14 வயது சிறுவனுடன் ஓடிப் போய்.. 26 வயசு டீச்சரின் அட்டகாசம்! - வீடியோ

    காந்திநகர்: 14 வயது சிறுவனை கரெக்ட் செய்து... கடைசியில் அவனை இழுத்து கொண்டு தலைமறைவாகி உள்ளார் 26 வயது ஸ்கூல் டீச்சர்! இப்போது பிள்ளையை காணோம், மீட்டு தாருங்கள் என்று சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.

    குஜராத் காந்திநகரில் உதயோக் பவன் அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவரின் 14 வயது மகன், 8ம் வகுப்பு படித்து வருகிறான்.. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இவன் காணாமல் போயிருக்கிறான்.. இதனால் பல இடங்களில் மகனை தேடிய பெற்றோர், கடைசியில் போலீசில் வந்து புகார் தந்தனர்.

    26 year old teacher abscond with 14 year old student in gujarat

    இந்த புகாரின் பேரில் போலீசாரும் மாணவனை தேடும் பணியில் இறங்கினர்.. ஸ்கூலுக்கு போனவன் திரும்பவும் வீட்டுக்கு வரவில்லை என்பதால், விசாரணையை நடத்த போலீசார் முதலில் ஸ்கூலுக்கு போனார்கள்.. அப்போதுதான், வெள்ளிக்கிழமை முதலே மாணவன் ஸ்கூலுக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

    பின்னர் நீண்ட நேர விசாரணைக்கு பிறகு, அந்த மாணவனின் டீச்சரையும் அன்று முதல் காணவில்லை என்பது தெரியவந்தது. அப்போதுதான் போலீசாருக்கு சந்தேகம் வலுத்து, விசாரணையை தீவிரப்படுத்தினர். 8-ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனுடன் பல நாட்களாகவே டீச்சருக்கு தவறான தொடர்பு இருந்து வந்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து மாணவனும், டீச்சரும் ஒன்றாக மாயமாகிவிட்ட நிலையில் அவர்களை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். 14 வயது மாணவன், முழு சம்மத்துடனேயே டீச்சருடன் சென்றிருந்தாலும், அது ஏற்றுக் கொள்ள முடியாததே.. மாணவனை ஆசைக்காட்டி டீச்சர் அழைத்து சென்றிருந்தாலும் அது கடத்தல் என்றே கருதப்படும் என்பதால், டீச்சர் மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    26 வயது டீச்சர், 8-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனுடன் தலைமறைவாகி உள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+