சீரியல், சண்டை, கேலி, கிண்டல், செய்தி- அனுமதிக்காக வரிசை கட்டி நிற்கும் 260 சேனல்கள்!
டெல்லி: இந்தியாவில் தற்போது 800க்கும் அதிகமான தனியார் டி.வி சேனல்கள் இயங்கிவரும் நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் புதிதாக லைசென்ஸ் கேட்டு 260 மனுக்கள் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் மொத்தம் 955 தனியார் சேனல்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. பல்வேறு காரணங்களால் இவற்றில் 125 அனுமதிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் 830 தனியார் சேனல்கள் இயங்கி வருகின்றன.

அன்றாட நிகழ்வுகள்:
இவற்றில், 398 செய்தி சேனல்களாகும். 432 சேனல்கள் செய்திசாராத பொழுதுப்போக்கு அம்சங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகள் தொடர்பானவையாகும்.
பொழுதுபோக்கு அம்சங்கள்:
கடந்த ஓராண்டு காலமாக செய்தி சேனல்களைவிட செய்திசாராத பொழுதுப்போக்கு அம்சங்கள் மற்றும் அன்றாட நிகழ்வுகள் தொடர்பான சேனல்களை தொடங்க அதிகமானோர் மனு செய்துவருவதாக தெரிகின்றது.
சேனல்களுக்கு அனுமதி:
கடந்த ஆண்டில் மட்டும் 14 செய்தி சேனல்களுக்கும், 31 செய்திசாராத பொழுதுப்போக்கு சேனல்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்திடம் மனு:
புதிதாக சேனல் தொடங்க மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு 260 மனுக்கள் காத்திருப்பதாகவும், இந்த ஆண்டின் நவம்பர் மாதம்வரை 39 செய்திசாராத பொழுதுப்போக்கு சேனல்களுக்கும், 3 செய்தி சேனல்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications