முறைகேடாக வீடு ஒதுக்கீடு... 27 நீதிபதிகளுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்!!
அகமதாபாத்: குஜராத் அரசிடம் இருந்து முறைகேடாக வீடு ஒதுக்கீடு பெறப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மும்பை, ஒடிஷா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட 27 நீதிபதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
குஜராத் அரசு நீதிபதிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் பெரும் சர்ச்சை வெடித்தது. நீதிபதிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக நீதிபதிகள் சேத்னா மற்றும் வியாஸ் ஆகியோர் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.

இந்தக் கடிதங்களையே பொதுநலன் வழக்காக எடுத்து விசாரித்தது குஜராத் உயர்நீதிமன்றம். இந்த வழக்கை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி வி.எம். சகாய் அதிரடியாக 27 நீதிபதிகள் மற்றும் குஜராத் அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.
இந்த 27 பேரில் உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியில் உள்ள நீதிபதி, மும்பை, ஒடிஷா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆகியோரும் அடங்குவர்.
மேலும் இந்தந் நோட்டீஸ் அனுப்பியுள்ள தற்காலிக தலைமை நீதிபதி சகாய் நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications