பெயர் சொல்லி கூப்பிட்ட சிறுமியை பாராட்டிய உம்மன் சாண்டி... நிதி உதவியும் கொடுத்தார்
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி விழாவில் பங்கேற்க வந்த அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டியை, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சொல்லி அழைத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெயர் சொல்லி அழைத்த மாணவியை பாராட்டியதோடு, அந்த மாணவியின் கோரிக்கையையும் நிறைவேற்றினார் உம்மன் சாண்டி.
கோழிக்கோடு மாவட்டம் நடைக்காவு பகுதியில், அரசு ஆசிரியர் பயிற்சி மைய அடிக்கல் நாட்டும் விழாவில் உம்மன் சாண்டி கலந்து கொண்டார். அடிக்கல் நட்டு விட்டு மேடையை நோக்கி நடந்து சென்றார். அப்போது மழலை குரலில் ‘உம்மன் சாண்டி' என்ற குரல் கேட்டது.

பள்ளைக் குழந்தைகள் நின்றிருந்த பகுதியில் இருந்துதான் அந்த குரல் வந்தது. தன்னை யார் பெயர் சொல்லி அழைத்தது என்று உம்மன் சாண்டி பார்வையால் தேடினார். அப்போது நான் தான் கூப்பிட்டேன் என்கிற தொனியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி அவரிடம் கையை உயர்த்திக் காட்டினாள்.
இதைப் பார்த்து உம்மன் சாண்டி, மாணவியை தன் பக்கமாக அழைத்தார். தன்னை ஷிவானி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த மாணவி, தன்னுடன் படிக்கும் அமல் கிருஷ்ணன் என்ற மாணவனின் பெற்றோர் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குடியிருக்க வீடு இல்லாமல் அவதிப்படுவதாகவும், அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாள்.
இதைக் கேட்ட முதல்வர், பள்ளி தலைமை ஆசிரியரை அழைத்து, மாணவி கூறுவது உண்மையா என்று கேட்டறிந்தார். அது உண்மை என்று சொன்னதும், அது குறித்து கோரிக்கை மனு கொடுக்கும்படி கேட்டார். அந்த மனுவில் உடனடியாக வீடு கட்ட ரூ.3 லட்சத்தை ஒதுக்கி கையெழுத்திட்டார்.
விழாவில் பேசிய உம்மன் சாண்டி, தன்னை பெயர் சொல்லி அழைத்த மாணவியை வெகுவாகப் பாராட்டினார்.
முதல்வரை தைரியாமாக பெயர் சொல்லி அழைத்ததோடு மட்டுமில்லாமல், ஒரு குடும்பத்தின் பிரச்சனையையும் எடுத்துக் கூறி உதவி பெற்றுத் தந்த அந்த சிறுமியை அனைவரும் பாராட்டினர்.
இதுவே தமிழ்நாடாக இருந்தால் இப்படி பெயர் சொல்லி அழைக்க முடியுமா?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications