பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ18,203 கோடியில் 14 மாநிலங்களில் 3,21,567 வீடுகள்
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 14 மாநிலங்களில் ரூ18,023 கோடியில் 3,21,567 வீடுகள் கட்டப்பட உள்ளன.
டெல்லி: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு 14 மாநிலங்களில் ரூ18,023 கோடியில் 3,21,567 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்காக மத்திய அரசு தம்முடைய பங்களிப்பாக ரூ4,753 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வீட்டுவசதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
ஹரியானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், மிசோரம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார், கேரளா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களின் 523 நகரங்களில் 3,21,567 வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு மத்திய அரசு தமது பங்களிப்பாக ரூ4,752 கோடி வழங்குகிறது.

ஹரியானாவில் 55 நகரங்களில் ரூ7,261 கோடியில் 70,671 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்கு மத்திய அரசு ரூ1,060 கோடி நிதி தருகிறது. மேற்கு வங்கத்தில் 86 நகரங்களில் ரூ 2,431 கோடியில் 59,929 வீடுகள் கட்டப்படும். மத்திய அரசின் நிதி ரூ899 கோடி.
ராஜஸ்தானில் 48 நகரங்களில் ரூ2,519 கோடியில் 54,821 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்கான மத்திய அரசின் நிதி ரூ822 கோடி. உத்தரப்பிரதேசத்தில் 121 நகரங்களில் ரூ1,059 கோடியில் 39, 683 வீடுகள் கட்டப்படும். இதற்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ595 கோடி.
குஜராத்தில் 19 நகரங்களில் ரூ2,204 கோடியில் 35,851 வீடுகள் கட்டப்படும். மத்திய அரசின் நிதியாக ரூ467 கோடி வழங்கப்படும். மிசோரமில் 16 நகரங்களில் ரூ316 கோடியில் 15,798 வீடுகள் கட்டப்படும். இதற்கான மத்திய அரசின் உதவி ரூ237 கோடி.
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் 58 நகரங்களில் ரூ605 கோடியில் 11,941 வீடுகள் கட்டப்படும். இதற்கான மத்திய அரசின் பங்களிப்பு ரூ 179 கோடி. மகாராஷ்டிராவில் 15 நகரங்களில் ரூ863 கோடியில் 10,639 வீடுகள் கட்டப்படும். இதற்கான மத்திய அரசின் நிதி ரூ156 கோடி.
மத்திய பிரதேசத்தில் 11 நகரங்களில் 5,426 வீடுகள் ரூ289 கோடியில் கட்டப்படும். இதற்கு ரூ81 கோடி நிதி உதவி தருகிறது மத்திய அரசு. பீகாரில் ரூ388 கோடியில் 10 நகரங்களில் 8154 வீடுகள் கட்டப்படும். இதற்கான மத்திய அரசின் நிதி ரூ122 கோடி.
கேரளாவில் ரூ203 கோடியில் 32 நகரங்களில் 5,073 வீடுகள் கட்டப்படும். இதற்கான மத்திய அரசின் நிதி ரூ 76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் 41 நகரங்களில் 3,345 வீடுகள் ரூ55 கோடியில் கட்டப்படும். இதற்கான மத்திய அரசின் உதவி ரூ50 கோடி.
பஞ்சாபில் ஒரு நகரத்தில் மட்டும் 176 வீடுகள் ரூ9 கோடியில் கட்டப்படும். இதற்கான மத்திய அரசின் நிதி ரூ2.7 கோடி. கோவாவில் 10 நகரங்களில் 60 வீடுகள் ரூ2.43 கோடியில் கட்டப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications