ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் பலி.. தண்டவாளத்தில் செல்பி எடுத்தபோது விபரீதம்
பெங்களூரு அருகே இன்று காலை தண்டவாளத்தில் செல்பி எடுத்த 3 மாணவர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரு: பிடதியில் இன்று காலை தண்டவாளத்தில் செல்பி எடுத்த 3 மாணவர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிடதி. இங்குள்ள பெங்களூர்-மைசூர் மார்க்க தண்டவாளத்தில் இன்று காலை 3 இளைஞர்கள் செல்பி எடுத்துள்ளனர்.
அப்போது ரயில் மோதியதில் 3 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்றவர்கள் ரயில் வரும் வேகத்தை தவறாக கணக்கிட்டு தண்டவாளத்தில் நின்றதாக கூறப்படுகிறது.

தண்டவாளத்தில் செல்பி
இளைஞர்கள் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பதை அருகில் இருந்த மக்களும் எச்சரித்துள்ளனர். இருப்பினும அதனை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் செல்பி எடுத்துள்ளனர்.

2 பேரின் அடையாளம் தெரிந்துள்ளது
உயிரிழந்த 3 பேரில் 2 பேரின் அடையாளம் தெரிந்துள்ளது. அவர்கள் இருவரும் பெங்களூரு நேஷனல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

செல்பி எடுக்க முயற்சி
அவர்கள் பெங்களூரு அருகில் உள்ள வொண்டர்லா பொழுது போக்கு பூங்காவை பார்வையிட வந்துள்ளனர். அப்போது ரயில் முன்பு அவர்கள் செல்பி எடுக்க முயன்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இரண்டாவது துயர சம்பவம்
தண்டவாளம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை கொண்டு மற்றொருவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவில் செல்பியால் ஏற்படும் இரண்டாவது துயர சம்பவம் இதுவாகும்.

கடந்த வாரம் நேர்ந்த சோகம்
கடந்த வாரம் பெங்களூரு நேஷனல் கல்லூரி நண்பர்கள் பெங்களூர் புறநகரிலுள்ள ஒரு ஏரியில் குளித்த போது சக நண்பன் விஷ்வாஸ் குளத்தில் மூழ்குவதை அறியாமல் செல்பி எடுத்தனர். பின்னர் குளத்தில் இருந்து அருகில் உள்ள கோயிலுக்கு சென்ற அவர்கள் அங்கு விஷ்வா வராததைக் கண்டு தாங்கள் எடுத்த செல்பி போட்டோக்களை பார்த்தனர்.

சோகத்தை ஏற்படுத்தியது
அதில் விஷ்வா நீரில் மூழ்கி உயிருக்கு போராடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விஷ்வாவை குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

செல்பி மோகத்தால் நேர்ந்த விபரீதம்
இந்நிலையில் இன்று செல்பி மோகத்தால் மூன்று கல்லூரி மாணவர்கள் ரயில் மோதி பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் செல்பி மோகத்தால் பலியாவதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications