மும்பை அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து - 6 பேர் பலி
மும்பை: மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பையில் உள்ள கமாதிபுரா பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாலும், கட்டட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என கருதப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
பீர் மதுபான பார் மற்றும் சிறு தொழிற்கூடம் ஆகியவை உள்ள இந்தக் கட்டிடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக 8 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 3 அவசர சிகிச்சை உதவி வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கட்டட விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனினும், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications