மே. வங்கம்: கல்லூரி மாணவி பலாத்கார கொலை வழக்கு- மூவருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு!
கொல்கத்தா: கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டணை விதித்தும் கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ளது காம்துனி கிராமம் . இந்த கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை கடந்த 2013 ஜூன் 7ம் தேதியன்று ஒரு கும்பல் கடத்தி கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தது. பின்னர் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் இந்த சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கோபால் நாஸ்கர் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார். இதர 8 பேர் மீதான வழக்கு விசா ரணை கொல்கத்தா செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்றது. நீதிபதி சஞ்சிதா சர்க்கார் வியாழக்கிழமையன்று தீர்ப்பளித்தார்.
அதன்படி சைபுல் அலி, அன்சார் அலி, அமினூல் அலி, இமானு வேல் இஸ்லாம், அமினூல் இஸ்லாம், போலா நாஸ்கர் ஆகிய 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
ரபிகுல் இஸ்லாம், நூர் அலி ஆகியோருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
6 பேருக்கும் நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தண்டனை விவரம் இன்று வெளியிடப்படும் என்று நீதிபதி சஞ்சிதா சர்க்கார் தெரிவித்தார். அதன்படி சைபுல் அலி, அன்சார் அலி, அமினூல் அலி ஆகியோர் மீதான பலாத்காரம், கொலை குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதால் அதிகபட்சமாக மரண தண்டனை விதித்து தீதிபதி தீர்ப்பளித்தார்.
இமானுவேல் இஸ்லாம், அமினூல் இஸ்லாம், போலா நாஸ்கர் ஆகிய மூவர் மீது பலாத்கார குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்ப தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications