ஜம்முவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் பலியாகினர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் அருகே உள்ள பதல் கிராமத்தில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ராணுவ முகாம் அமைந்துள்ளது. அந்த முகாம் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தினர்.

3 GREF personnel killed in terror strike at Akhnoor, J&K

இந்த தாக்குதலில் 3 வீரர்கள் பலியாகினர். தீவிரவாதிகள் நேற்று இரவே பதல் கிராமத்திற்குள் நுழைந்து பதுங்கியிருந்து இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 வீரர்கள் பலியான முகாம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தாக்குதலை அடுத்து அனைத்து ராணுவ முகாம்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+