நாளை தேர்தல் நடைபெற உள்ள மதுபானியில் குண்டுவெடிப்பு: 3 பாஜக தொண்டர்கள் காயம்
மதுபானி: நாளை தேர்தல் நடைபெற உள்ள மதுபானி தொகுதியில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பாஜக கட்சித் தொண்டர்கள் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
16வது லோக்சபா தேர்தலின் 7வது கட்டமாக நாளை பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று அம்மாநிலத்தில் மதுபானி பகுதியில் உள்ள காத்மா கோயிர் கிராமத்தில் மர்மநபர்களால் டிபன் பாக்ஸ் ஒன்றில் முற்றிலும் தயாரிக்கப்படாத குண்டு வைக்கப் பட்டிருந்தது.
எதிர்பாராத விதமாக அந்தக் குண்டு வெடித்ததில் பாஜக கட்சியைச் சேர்ந்த மூன்று தொண்டர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
மேற்கொண்டு குண்டு வெடிப்பு தொடர்பான முழு தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அங்கு குண்டு வெடித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications