லடாக்கில் ஸ்கிராப் சென்டரில் பயங்கர குண்டு வெடிப்பு..3 பேர் உயிரிழப்பு, 9 பேர் காயம்
லடாக்: லடாக்கின் கார்கில் மாவட்டம் ட்ராஸ் நகரில் பழைய உடைந்த பொருட்கள் தளத்தில் மர்மமான முறையில் பயங்கரமாக வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரை அடுத்து உள்ள லடாக்கின் டராஸ் நகரில் பழைய பொருட்களை ஸ்கிராப் செய்யும் இடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு சிலர் வேலை செய்து வந்துள்ளனர். நேற்று அந்த ஸ்கிராப் தளத்தில் திடிரென பயங்கரமாக வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறி உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலீசார் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். அப்போது 3 பேர் இறந்து கிடந்தனர். 9 பேர் காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த குண்டுவெடிப்பு எப்படி நடந்தது என்பது பற்றி உடனடியாக தெரியவில்லை. மர்மமான முறையில் குண்டு வெடித்திருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே இறந்து போன மூன்று பேர் கூலித்தொழிலாளிகள் என்பது உறுதியாகி உள்ளது. இந்த தகவலை கார்கில் மாவட்ட போலீஸ் எஸ்பி அனயத் அலி சவுத்ரி உறுதி செய்துள்ளார்.காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவருவதையும் அவர் உறுதி செய்தார்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் வேறு ஏதேனும் குண்டுகள் உள்ளனவா என்பதை சோதித்தனர். அத்துடன் வெடித்த குண்டு எந்த மாதிரியான வகையை சேர்ந்தவை என்பது குறித்தும் மாதிரிகளை சேகரித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைக்கு பிறகு எந்த மாதிரியான குண்டு வெடித்தது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications