மேகாலயா ராஜ்பவனை லேடீஸ் கிளப்பாக மாற்றிய சண்முகநாதனின் பிஆர்ஓ சின்மோயி டிஸ்மிஸ்!
மேகாலயா ஆளுநர் மாளிகையை இளம் பெண்கள் கிளப்பாக மாற்ற சண்முகநாதனுக்கு உதவியாக இருந்த சின்மோயி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஷில்லாங்க்: பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கி பதவி இழந்த மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் நியமித்த பிஆர்ஓ சின்மோயி தேகா உட்பட 3 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
மேகாலயா ஆளுநராக இருந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சண்முகநாதன். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த பிரமுகரான சண்முகநாதன், மேகாலாய மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

பாலியல் புகார்
மேகாலயா ஆளுநர் பொறுப்புடன் அருணாசல பிரதேச மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார் சண்முகநாதன். கடந்த சில நட்களுக்கு முன்னர் பாலியல் புகாரில் சிக்கினார் சண்முகநாதன்.

இளம்பெண்கள் கிளப்
இதனைத் தொடர்ந்து மேகாலயா ஆளுநர் மாளிகையையே இளம்பெண்கள் கிளப்பாக சண்முகநாதன் மாற்றிவிட்டதாக ராஜ்பவன் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போர்க்கொடி தூக்கினர். ஷில்லாங்கில் ஆளுநர் மாளிகை முன்பாக போராட்டம் நடந்தது.

ராஜினாமா
இதனால் தமது ஆளுநர் பதவியை சண்முகநாதன் ராஜினாமா செய்தார். இதனிடையே சண்முகநாதனுக்கு மிகவும் நெருக்கமான பிஆர்ஓ சின்மோயி தேகா உட்பட 3 பேர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 பேரும் சண்முகநாதனால் ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்பட்டவர்கள்.

சின்மோயி உறவினர்கள்
இந்த சின்மோயி தேகாவின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இளம்பெண்கள். இவர்கள்தான் அதிகமாக சண்முகநாதனின் பதவிக் காலத்தில் ஆளுநர் மாளிகையில் சுகபோகமாக அனைத்து வசதிகளோடு வலம் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications