நேரம் ஒதுக்க முடியாது.. சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு அனுமதி மறுத்த பெங்களூர் சிறை அதிகாரிகள்
சசிகலாவை சந்திக்க பெங்களூர் சிறைக்கு சென்ற செங்கோட்டையன் உள்ளிட்ட 3 அமைச்சர்களுக்கும் சிறை அதிகாரிகள் நேரம் ஒதுக்கவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க செங்கோட்டையன் உட்பட 3 அமைச்சர்கள் சென்று சந்திக்க முடியாமல் திரும்பியுள்ளனர்.
சசிகலாவை நேற்று அதிமுக துணை பொதுச்செயலாளரும், அவரது அக்கா மகனுமான டி.டி.வி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

இதன்பிறகுதான், பெங்களூர் சிறையிலிருந்து, சென்னை சிறைக்கு தன்னை மாற்றக்கோரும் கோரிக்கையை சிறை அதிகாரியிடம் சசிகலா முன் வைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய மூவர் சசிகலாவை சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்த சென்றனர். மதியம் 3 மணிக்கு அவர்கள் சந்திப்பதாக இருந்தது.
ஆனால் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டும், சிறை அதிகாரிகள் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கவில்லை. தண்டனை கைதியை வாரத்திற்கு இரு நாட்கள் மட்டுமே சந்தித்து பேச முடியும் என்ற விதிமுறை காரணமாக அமைச்சர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications