காஷ்மீரில் பனிச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் இன்று தனி விமானத்தில் தமிழகம் வருகை
காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 3 தமிழகர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்று மாலை தனி விமானம் மூலம் தமிழகம் வரும் என தெவிரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 3 தமிழக வீரர்களின் உடல்கள் இன்று மாலை தமிழகம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான படைக்கு சொந்தமான தனித்தனி விமானங்களில் வீரர்களின் உடல்கள் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் மாநிலம் குரேஸ் பகுதியில் கடந்தவாரம் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ முகாம் முற்றிலும் புதையுண்டது. இந்த விபத்தில் முகாமுக்குள் இருந்த வீரர்கள் உயிருடன் புதைந்தனர்.

இந்த பனிச்சரிவில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாயினர். இதில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. ஒருவர் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளவரசன் என்றும் மற்றொருவர் மதுரையைச் சேர்ந்த சுந்தரப்பாண்டி ஆவர்.
இந்நிலையில் பனிச்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் 5 பேரும் நேற்று மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
அவர்களில் ஒருவர் தமிழக வீரர் என தெரியவந்துள்ளது. அவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கண்ணன் என கூறப்படுகிறது. இதன் மூலம் உயிரிழந்த தமிழக வீரர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தமிழக வீரர்கள் 3 பேரின் உடல்கள் இன்று மாலை தமிழகம் வருகிறது.
விமானப்படைக்கு சொந்தமான தனித்தனி விமானத்தில் வீரர் உடல்கள் கொண்டுவரப்படுகின்றன. தஞ்சை விமானப்படை தளத்திற்கு வரும் இளவரசன் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சுந்தரபாண்டியன், தாமோதர கண்ணன் ஆகியோரின் உடல்கள் மதுரை கொண்டு செல்லப்படவுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications