காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கி சூடு.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம் தொடர்ந்து திடீரென்று தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு ஆட்சி கலைந்த பின் அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர்.

இந்த தாக்குதலில் சமயங்களில் சில ராணுவ வீரர்களும் இறந்து இருக்கின்றனர்.இன்று மலை புல்வாமா வனபகுதியில் திடீரென்று ராணுவ வீரர்கள் சோதனை நடத்தினர். அங்கு தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக கொடுக்கப்பட்ட தகவலில் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
தேடுதலின் முடிவில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராணுவத்துக்கும், தீவிரவாதிக்கும் இடையில் துப்பாக்கிசூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூடு 3 மணி நேரம் நடந்தது.
இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் தரப்பில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.












Click it and Unblock the Notifications