30 வயது பெண்ணுக்கு அடிவயிற்றில் வலி.. மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு பேரதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 30 வயது பெண் ஒருவர் அடிவயிற்று வலிக்காக சிகிச்சை எடுத்த போது அவர் ஒரு ஆண் என்பதும் அவருக்கு விரைப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

கொல்கத்தாவில் பிர்பும் பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இத்தனை நாட்கள் எந்த பிரச்சினையும் இல்லாத அந்த பெண்ணுக்கு ஒரு நாள் அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது.

இதற்காக கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புற்றுநோய் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் அனுபம் தத்தாவும், புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் சமன்தாஸும் பரிசோதனை செய்தனர்.

பெண்

பெண்

அப்போது அவருக்கு பிறப்பிலேயே கருப்பையும் சினைப்பைகளும் இல்லை என்பதை கண்டறிந்தனர். அதாவது அந்த பெண் பெண்ணே இல்லை என்றும் ஆண் என்றும் தெரியவந்ததை அடுத்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு பெண்ணுக்கான உடல் உறுப்புகள் அனைத்தும் இருக்கிறது. அவரது குரலும் பெண் போன்றே உள்ளது.

குரோமோசோம்கள்

குரோமோசோம்கள்

அவரிடம் மருத்துவர்கள் விசாரணை நடத்தியதில் மாதவிலக்கும் அவருக்கு வந்ததே இல்லையாம். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் இவருக்கு நடந்திருப்பது ஒரு அபூர்வ நிலையாகும். இப்படி 22 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே இது போன்ற நிலை ஏற்படும். இவருக்கு ஆண்களுக்கான எக்ஸ்ஒய் குரோமோசோம்கள் மட்டும் உள்ளது.

புற்றுநோய்

புற்றுநோய்

பெண்ணுக்குரிய எக்ஸ் எக்ஸ் குரோமோசோம்கள் இல்லை என தெரியவந்துள்ளது. அடிவயிற்றில் வலி என அவர் சொன்னதால் அவரது உடலை பரிசோதனை செய்த போது ஆண்களுக்கான விதைப்பைகள் அவருக்கு அமைந்திருப்பது தெரியவந்தது. பின்னர் அவருக்கு பயாப்சி சோதனை செய்ததில் அவருக்கு விதைப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தோம்.

பெண் தோற்றம்

பெண் தோற்றம்

அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளித்து வருகிறோம். அவருக்கு விதைப்பைகள் இருந்தாலும் அவை உரிய வளர்ச்சியை பெறவில்லை. டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனும் சுரக்கவில்லை. பெண்ணுக்கான ஹார்மோன் காரணமாக அவர் பெண் போன்ற தோற்றத்தை பெற்றுள்ளார்.

கவுன்சலிங்

கவுன்சலிங்

இவருக்கு இவரது கணவருக்கும் கவுன்சலிங் செய்து வருகிறோம். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த பெண்ணின் தாய்வழி சொந்தத்தில் இரு பேருக்கும் இது போன்ற பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இவரது 28 வயது தங்கைக்கும் பரிசோதனைகள் செய்தோம். அதிலும் அவரும் ஆணாகவே இருக்கிறார். இது மரபணு கோளாறு ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+