முதல்வர் உட்பட ஆளும் கட்சியின் 33 எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்! அருணாச்சலபிரதேசத்தில் பாஜக ஆட்சி?
இடா நகர்: அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் 33 பேர் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அக்கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அருணாச்சல் மக்கள் கட்சியிலிருந்து முதல்வர் பெமா காண்டு, துணைமுதல்வர், 7 எம்.எல்.ஏக்கள் நேற்று நீக்கப்பட்டனர். இந்நிலையில் அருணாச்சல் மக்கள் கட்சியின் பெமா காண்டு மற்றும் 32 எம்.எல்.ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து பெமா காண்டு கூறுகையில், "நான், சபாநாயகர் உட்பட 33 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்துகொண்டோம். எனவே, இப்போது இது பாஜக அரசாகும். ஏற்கனவே நாங்கள் பாஜகவில் இணையவே திட்டமிட்டிருந்தோம். எங்கள் கட்சி தலைமையின் நடவடிக்கை அதை துரிதப்படுத்திவிட்டது" என்றார். வடகிழக்கு மாநிலம் ஒன்றில் பாஜக முழு பலத்தோடு ஆட்சியில் அமருவது அருணாச்சல பிரதேசத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது (அசாமில் கூட்டணி).
அருணாச்சல் மக்கள் கட்சியின் மொத்த எம்எல்ஏக்கள் பலம் 43 ஆகும். அதில் இப்போது 10 பேர்தான் அதே கட்சியில் எஞ்சியுள்ளனர். பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், 2 சுயேட்சைகளும் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். தற்போது மேலும் 33 எம்எல்ஏக்கள் இணைந்துள்ள நிலையில், பாஜக பலம் 47ஆக உயர்ந்துள்ளது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications