4 வருட பாஜக ஆட்சியில் புதிய வளர்ச்சி அடைந்த விமான போக்குவரத்து!
கடந்த 4 வருட மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியாவின் விமான போக்குவரத்து துறை மிகவும் அதிக அளவில் வளர்ந்து இருக்கிறது.
Recommended Video

டெல்லி: கடந்த 4 வருட மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியாவின் விமான போக்குவரத்து துறை மிகவும் அதிக அளவில் வளர்ந்து இருக்கிறது.
தற்போது மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 4 வருட ஆட்சியை வெற்றிகரமாக முடித்துள்ளது. நான்கு வருடம் என்னென்ன நலத்திட்டங்கள் செய்யப்பட்டது என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 4 வருடத்தில் சிறு சிறு நகரங்களுக்கு கூட விமான போக்குவரத்தை ஏற்படுத்தியதன் மூலம் போக்குவரத்து பெரிய அளவில் வளர்ந்துள்ளது. அதேபோல் மக்கள் மிகவும் அதிக அளவில் விமானங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

எண்ணிக்கை
கடந்த நான்கு வருடத்தில் விமான போக்குவரத்தில் உலகிலேயே இந்தியா மூன்றாவது பெரிய நாடாக மாறியுள்ளது. கடந்த மூன்று வருடத்தில் விமான போக்குவரத்தின் அளவு இந்தியாவில் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இப்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இப்போதே ரயிலில் பயணிப்பவர்களை விட விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது.

மாற்றம்
போபால், இந்தூர் ராய்ப்பூர் ஆகிய உள்ளூர் விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக மாற்ற மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. ஆனாலும் விமான தேவை, விமான எண்ணிக்கை, பகுதியின் தரம், போக்குவரத்து பயணிகள் எண்ணிக்கை, 9000 அடி உள்ள ஓடுதளம், சிறப்பு வசதிகள் என பல காரணிகள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இந்த விமான நிலையங்கள் விரைவில் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்.

பசுமை விமான நிலையம்
ஹைதராபாத், கொச்சி, டெல்லி போன்ற பெரிய விமான நிலையங்கள் மொத்தமாக பசுமை சார்ந்த விமான நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லிதான் முதல்முறையாக சோலார் மூலம் இயங்கும் விமான நிலையமாக மாறியது. அதன்பின் கொச்சியும் சோலார் மூலம் இயங்க ஆரம்பித்தது. தற்போது ஹைதராபாத் விமான நிலையமும் சோலார் மூலம் இயங்க தொடங்கியுள்ளது. விரைவில் மற்ற விமான நிலையங்களும் இப்படி மாற்றப்படும்.

புதிய விதிமுறை
மத்திய அரசு இந்த வருடம்தான் இந்தியாவின் முதல் தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையை அறிமுகப்படுத்தியது. இது இந்திய விமானங்கள் எளிதாக வெளிநாடு செல்ல வகை செய்தது. ஐரோப்பா, தெற்காசிய நாடுகளை இது எளிதாக இணைக்க வகை செய்தது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications