For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒடிசாவில் 400 மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சரண்

Google Oneindia Tamil News

மால்கங்கிரி : ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மற்றும் அவர்களின ஆதரவாளர்கள் 400 பேர் சரண் அடைந்தனர்.

ஒடிசா அரசுக்கு மாவோயிஸ்டுகள் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வந்த நிலையில், அவர்களை சரணடையுமாறும், அவ்வாறு சரணடைந்தால், மன்னிப்பு அளிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது.

maoist surrender

இந்நிலையில், மாதேரு பஞ்சாயத்தைச் சேர்ந்த 6 கிராமங்களைச் சேர்ந்த இடதுசாரி மாவோயிஸ்ட் குழுவினர் 45 பேர் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்த கிராமத்தினர் சுமார் 400 பேர் சரண் அடைந்ததாக மாவட்ட எஸ்பி மித்ராபானு மொகாபத்ரா தெரிவித்தார்.

சரண் அடைந்தவர்கள் அவர்களின் கிராமங்களிலேயே அமைதியான வாழ்க்கையை தொடர உதவிகள் செய்து தரப்படும் எனவும், அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகளை கைவிடுவது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் மாவட்ட எஸ்.பி கூறினார்.

மேலும், கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 1000 பேர் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைந்திருப்பதாகவும், இது நல்ல முன்னேற்றம் என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
In continuing spate of surrenders, about 400 Maoist supporters, including 45 members of the Left Wing Extremism militia group and village committee members, surrendered before the police in Odisha's naxal-hit Malkangiri district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X