ஆர்ஆர்ஆருக்கு வாங்கியது 45 கோடி! ஜூனியர் NTR முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஆந்திரா: இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர் தனது முதல் படத்திற்கு எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பது பற்றியும் அந்தப் பணத்தை அவர் என்ன செய்தார் என்பது பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமா உலகில் என்.டி.ஆரின் வாரிசாகக் கொண்டாடப்பட்டு வருபவர் ஜூனியர் என்டிஆர். இவரது 'பான் இந்தியா' படமான ஆர்ஆர்ஆர் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூலை ஈட்டியது. இதில் நடிப்பதற்காக இவர் 45 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இன்றைக்கு டோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக வலம் வரும் ஜூனியர் என்டிஆர், பெரிய குடும்ப பின்னணியிலிருந்து சினிமாவுக்கு வந்திருந்தாலும் அவரது முதல் பட சம்பளம் இந்தளவுக்கு இல்லை.

முதல் படமான நின்னு சூடாலனியில் நடிப்பதற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார்? அந்த முதல் சம்பளத்தை அவர் என்ன செய்தார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான தேவாரா: பார்ட் 1 இதுவரை சுமார் 370 கோடி வசூலாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்றைக்கு தெலுங்கு பட உலகில் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோவாக வலம் வரும் இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக திரைத்துறைக்கு நடிக்க வந்தார். அவரது ஸ்டூடன்ட் நம்பர் ஒன் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது.
அதைத் தொடர்ந்து சிம்ஹாத்ரி (2003), யமடோங்கா (2007), பிருந்தாவனம் (2010) , பாட்ஷா (2013) எனப் பல வெற்றிப் படங்களைத் தந்தார். இவை அனைத்து வணிகரீதியாக வெற்றியடைந்த திரைப்படங்கள். விமர்சனமும் நல்ல அளவிலேயே கிடைத்தன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஜூனியர் என்டிஆரின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது. 2001 ஆம் ஆண்டு வெளியான நின்னு சூடலனி மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானார். அதனை வி.ஆர். பிரதாப் இயக்கி இருந்தார்.ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.

இதே ஆண்டில், இவர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் சேர்ந்து 2001இல் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தெலுங்கு சினிமா உலகில் இந்தப் படம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. பின்னர் திரையுலகில் தன்னை பெரிய நடிகராக நிலைநிறுத்திக் கொண்டார். அதனை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிக் குவித்தனர்.
இந்நிலையில்தான் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் சரணுடன் இணைந்து ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார். அதற்காக அவர் 45 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக நியூஸ் 18 செய்தி மூலம் அறிய முடிகிறது. ஆலியா பட் 9 கோடியும் அஜய் தேவ்கன் 25 கோடியும் பெற்றுள்ளனர் என்றும் தெரிகிறது.

இன்றைக்கு இத்தனை கோடிகளில் புரளும் ஜூனியர் என்டிஆர், அவரது முதல் படமான நின்னு சூடாலனிக்கு வாங்கிய சம்பளம் வெறும் ரூ.4 லட்சம்தான் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை கூறுகிறது. அப்போது அந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்த இவர், மொத்த தொகையையும் அம்மா ஷாலினி நந்தமுரியிடம் கொடுத்துள்ளார். கடந்த 23 ஆண்டுகள் முன்பு 4 லட்சம் சம்பளம் பெற்ற ஜூனியர் என்டிஆர் இன்று, நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications