அமெரிக்காவின் சட்டவிரோத குடியேறிகளில் 4.50 லட்சம் பேர் இந்தியர்கள்!
டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரில் 4.50 லட்சம் பேர் இந்தியர்கள் என்று ஒரு ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகளில் 4 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும் இத்தகவல் கூறுகிறது. இருப்பினும் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து சட்டவிரோத மக்களின் எண்ணிக்கையான பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்றும் இந்தத் தகவல் கூடுதலாக தெரிவிக்கிறது.

ப்யூ ரிசர்ச் (Pew Research) என்ற அமைப்பின் ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது 2012ம் ஆண்டு கணக்காகும்.
கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு காலத்தில் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக இடம் பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாம். அதேசமயம், 2012ம் ஆண்டு கணக்குப்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக இடம் பெயர்ந்து வந்து வாழ்வோரின் எண்ணிக்கை 1.12 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது அதிகரிக்காமல் உள்ளதாம்.
இன்டியானாவில் உள்ள சட்டவிரோத இந்தியர்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக உள்ளது. இரண்டாவது சட்டவிரோத குடியேறிகளாக இந்தியர்கள் உள்ளனராம். மிச்சிகனில் 14 சதவீதம், மின்னசோட்டாவில் 9, நியூ ஜெர்சியில் 11, ஓஹையோவில் 11, பென்சில்வேனியாவில் 11, வாஷிங்டனில் 5 சதவீதமாக இந்தியர்களின் எண்ணிக்கை உள்ளது.
அலாஸ்கா 4, அரிஸோனா 2, டெலவரே 7, இல்லினாய்ஸ் 5, கான்சாஸ் 5, மாசசூசட்ஸ் 10, மிசவுரி 9, ஓரிகான் 2 சதவீதமாக உள்ளது. இங்கு 3வது பெரிய சட்டவிரோத குடியேறிகளாக இந்தியர்கள் உள்ளனர்.
தென் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக வருவோரின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும் கூட, ஆசியா, கரீபிய தீவுகள், மத்திய அமெரிக்க ஆகிய பகுதிகளிலிரு்ந்து வருவோரின் எண்ணிக்கை சற்று கூடியுள்ளதாம்.
டாப் 10 வரிசையில் 3 லட்சம் பேருடன் சீனா, 2 லட்சம் பேருடன் பிலிப்பைன்ஸ், 1.80 லட்சம் பேருடன் தென் கொரியா, 1.70 லட்சம் பேருடன் டொமினிக்கன் குடியரசு, 1.50 லட்சம் பேருடன் கொலம்பியா ஆகிய நாடுகள் உள்ளன.
அமெரிக்காவில் புளோரிடா, மேரிலான்ட், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, விர்ஜீனிய ஆகிய மாகாணங்களில்தான் அதிக அளவில் சட்டவிரோத குடியேறிகள் குடி பெயர்கிறார்கள். இடஹோ, நெப்ரஸ்கா ஆகிய மாகாணங்களிலும் இதே நிலைதான்.
அதேசமயம், அரிஸோனா, கொலராடோ, நெவேதா, நியூ மெக்ஸிகோ, ஓரிகான் மாகாணங்களில் இது குறைந்து காணப்படுகிறது.
-
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
பாபா வங்காவின் ரகசியக் குறிப்புகள்! ஜூன் 15 முதல் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் அந்த '5' ராசிகள்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications