லடாக் பகுதியில் நிலநடுக்கம்... குழுங்கிய வீடுகள்.. மக்கள் அதிர்ச்சி.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
லடாக்: ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை 10.54 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேசிய புவியியல் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், லடாக் பகுதி அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் சில வினாடிகள் பூமி குழுங்கியது. கட்டிடங்கள் திடீரென குழுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்று பீதிக்குள்ளாகினர்.
ஆனால் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாகவோ.உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாகவும் எந்த தகவலும் இல்லை. எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications