நடுவானில் விமானத்தில் மைக் பிடித்து பாடிய சோனு நிகாம்... 5 ஏர்ஹோஸ்டஸ்கள் சஸ்பெண்ட்
டெல்லி: பிரபல பாலிவுட் பாடகரான சோனு நிகாமை, விமானத்தின் அறிவிப்பு மைக்கில் பாட அனுமதித்ததற்காக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஐந்து விமானப் பணிப்பெண்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பாலிவுட்டின் பிரபல பாடகர் சோனு நிகாம். இவர் கடந்த மாதம் நான்காம் தேதி, ஜோத்பூரிலிருந்து மும்பை வந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது அவருடன் பயணித்த மற்ற பயணிகள், சோனுவைப் பாடல் பாடும்படி கேட்டு நச்சரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரும் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார்.
அனைவருக்கும் கேட்க வேண்டும் என்ற காரணத்தால், விமானத்தில் பயணிகளுக்கு அறிவிப்பு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மைக்கில் அவர் பாடியுள்ளார்.
சோனுவின் பாடலைக் கேட்டு உற்சாகமடைந்த சகபயணிகள், தாங்களும் அவருடன் சேர்ந்து பாடியுள்ளனர். அதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சோனு, ‘வாவ் உங்கள் அனைவருக்குள்ளும் ஒரு பாடகர் இருக்கிறார்' எனப் பாராட்டியுள்ளார்.
சோனுவும், மற்ற பயணிகளும் பாடும் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகப் பரவியது.
அதனைத் தொடர்ந்து, விமான ஊழியர்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த மைக் உள்ளிட்ட அறிவிப்பு சாதனத்தை எப்படி பயணிகள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தலாம் எனக் கண்டனம் எழுந்தது.
அதன் தொடர்ச்சியாக விமான பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ இது குறித்த விசாரணையை முடுக்கிவிட்டது. அதில், சம்பவத்தின் போது பணியில் இருந்த 5 விமானப் பணிப்பெண்கள் சோனுவுக்கு அந்த அறிவிப்பு மைக்கை தந்தது உறுதியானது.
அதனைத் தொடர்ந்து விமானத்தின் தொடர்பு சாதனைத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக சம்பந்தப்பட்ட 5 பணிப்பெண்களையும் சஸ்பெண்ட் செய்து ஜெட் ஏர்வேஸ் உத்தரவிட்டுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் நடப்பது இது முதன்முறையல்ல. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் விமானம் ஒன்றில் ஹோலி பண்டிகை சமயத்தில் நடுவானில் விமானத்தில் பாலம் பிச்காரியுடன் சேர்ந்து விமான ஊழியர்களும் பாட்டுப்பாடி, நடனம் ஆடி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமா..
அதேசமயம், பல்வேறு சர்வதேச விமானங்களில் ஏர்ஹோஸ்டஸ்களும், ஊழியர்களும் பாட்டுப் பாடுவதும், ஆடுவதும் சகஜம் என்றும் பயணிகள் சொல்கிறார்கள். ஒரு ஐரோப்பிய நிறுவனம், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்போது இந்தியாவுக்கு இயக்கப்பட்ட விமானங்களில் தங்களது ஏர் ஹோஸ்டஸ்களை ஷாருக்கான் படப் பாடலுக்கு நடனம் ஆட வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications