மேற்கு வங்காளம்: 5 சிறுமிகள் விஷம் குடித்து தற்கொலை... மேலும் ஒரு சிறுமி உயிர் ஊசல்!
ஜார்க்ராம்: மேற்கு வங்காள எல்லையில் உள்ள ஜார்க்ராம் அருகே ஜாம்போனி கிராமத்தில் 5 சிறுமிகள் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டனர். மற்றொரு சிறுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சிறுமிகளின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை.
உயிரிழந்த சிறுமிகள் நமிதா நாயக், பேபி நாயக், சரஸ்வதி நாயக், சோமா நாயக் மற்றும் பாலன் நாயக் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் 13 முதல் 19 வயது கொண்டவர்கள்.
ஜார்கண்ட் எல்லையையொட்டிய ஒரோ கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சிறுமிகளின் சடலத்தை கிராம மக்கள் கண்டெடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மேற்கு வங்காளம் மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்ட போலீஸ் அதிகாரி கூறுகையில், "கிராமத்தில் உள்ள குளத்தின் அருகே சிறுமிகள் மயங்கிய நிலையில் கிடந்ததை பொது மக்கள் மாலை பார்த்துள்ளனர். உடனடியாக அவர்கள் சிறுமிகளை எழுப்ப முயற்சித்துள்ளனர். இதனையடுத்து சிறுமிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
5 சிறுமிகள் உயிரிழந்துவிட்டனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். மற்றொரு சிறுமி பூஜா நாயக் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்," என்று கூறியுள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் சிறுமிகள் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்த சிறுமிகளில் மூன்றுபேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
சிறுமிகள் தற்கொலை செய்துக் கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications