ஹைதராபாத் முத்தூட் நிதி நிறுவனத்தில் 5 கிலோ தங்கம் கொள்ளை
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள முத்தூட் மினி பைனான்ஸ் அலுவலகத்தில் இருந்து 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தின் பீரம்குடா பகுதியில் முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவன அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்குள் இன்று அதிகாலை புகுந்த மர்ம நபர்கள் 5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்தூட் நிறுவன அலுவலகத்தில் 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லி ரோகினி பகுதியில் உள்ள முத்தூட் நிறுவனத்திற்குள் புகுந்த 6 மர்ம நபர்கள் காவலாளியை தாக்கிவிட்டு துப்பாக்கி முனையில் ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
அந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் கழித்து பெங்களூரில் உள்ள முத்தூட் நிறுவனத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதையடுத்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் மதுரையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் இருந்து 37 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பல நாடுகளை விட கேரளாவைச் சேர்ந்த முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ் மற்றும் முத்தூட் பின்கார்ப்பிடம் அதிகம் தங்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications